Saturday, December 25, 2010

காதல் சின்னம் தாஜ்மஹால்


 
 உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.

 மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

 வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.
 
 தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது.
 
 

 
"கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்''

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 25

1643: அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு, கிழக்கிந்திய கம்பனியின் கப்டன் வில்லியம் மைனோரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
1926: ஜப்பானிய சக்கரவர்த்தி டாய்ஸோ காலமானார்.
1932: சீனாவில் கான்ஸு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 275 பேர் பலி.
1968: இந்தியாவின் தமிழ்நாட்டில் சம்பள உயர்வு கோரி போராடிய தலித் மக்கள் 42 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1977: நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
1989: ருமேனிய ஜனாதிபதி நிகோலோ சௌசெஸ்குவும் அவரின் மனைவி எலினாவும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இரகசிய இராணுவ விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டதால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் ராஜினாமாச் செய்தார்.

கம்ப்யூட்டரில் மானிட்டர் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் அவசரமாக பணியில் ஈடுபட்டு இருக்கும்போது மானிட்டரில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையாக கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.முதலில் மானிட்டருக்கு மின்சப்ளை உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால், கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு மின் கேபிள் செல்லும். இது. சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாக பொருத்திப் பார்ப்பது நல்லது.

தற்போது வந்துள்ள மானிட்டர் என்றால் அதற்கு தனியே பவர் கார்டு இருக்கும். அது சரியானபடி பவர்பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். அந்த பிளக்குக்கு தனியாக சுவிட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
பொதுவாக மானிட்டரின் வலது பக்கத்தில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜெஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.

மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. அது ஆன் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒருசிறிய லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்சு நிறத்தில் அல்லது மெலிதான பச்சை நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது. கம்ப்யூட்டரின் சிபியூவுக்கு சிக்னல் வரவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளை சரி செய்து பார்க்க வேண்டும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்ட வேண்டும்.
சந்தேகத்துக்கு உரிய மானிட்டரை மற்றொரு கம்ப்யூட்டரில் பொருத்தி பார்க்கலாம். அப்போதும் மானிட்டர் வேலை செய்யவில்லை என்றால்,மானிட்டரில் தான் கோளாறு உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் இருக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும்போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாம தெரியும். , உங்களது டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று அர்த்தம். எனவே அதை மாற்றிப் பார்க்கலாம்.
புதிய டிஸ்பிளே கார்டு பொருத்தப்பட்ட பின்னரும் மானிட்டர் சரிப்பட்டுவரவில்லை என்றால், மானிட்டரை மாற்ற வேண்டும் அல்லது மானிட்டரை பழுது பார்க்க வேண்டும்.

இவ்வாறு மானிட்டர் பிரச்சினைகளை நீங்களே முடிந்த அளவு தீர்க்கலாம்.

Friday, December 24, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 24

1294: பாப்பரசர் பதவியிலிருந்து 5 ஆம் புனித செலஸ்டின் ராஜினாமா செய்ததால் 8 ஆம் பொனிபேஸ் பாப்பரசராக தெரிவானார்.

1906: முதலாவது வானொலி ஒலிபரப்பை கனடாவைச் சேர்ந்த ரெஜினோல்ட் பெஸென்டென் நிகழ்த்தினார். கவிதையொன்றும் வயலின் இசையொன்றும் உரையொன்றும் ஒலிபரப்பப்பட்டது.
1914: முதலாம் உலக யுத்தத்தில் நத்தார் போர்நிறுத்தம் ஆரம்பமாகியது.
1914 அல்பேனியா சுதந்திரம் பெற்றது.
1929: ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஹிபோலிட்டோ யிரிகோயெனை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.
1951: இத்தாலியிடமிருந்து லிபியா சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் மன்னராக பதவியேற்றார்.
1966: அமெரிக்க இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கனடா எயார் விமானமொன்று தென் வியட்நாமில் விபத்துக்குள்ளாகி 129 பேர் பலி.
1968: அப்பலோ 8 விண்வெளிப் பயணத்தின் மூலம் மனிதர்கள் முதல் தடவையாக சந்திரனை சுற்றிவந்தனர். 10 தடவை அவர்கள் சந்திரனை வலம் வந்தனர்.

1979: ஐரோப்பாவின் முதலாவது ரொக்கட்டான ஆரியன் ஏவப்பட்டது.
1997: அல்ஜீரியாவில் கலவரங்களால் 50-100 பேர் படுகொலை.
 

Kingston அறிமுகப்படுத்தும் HyperX MAX 3.0 external USB 3.0 hard drive

Kingston லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும்.இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GB கொள்ளளவுகளில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது.

இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும் write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.


Kingston HyperX MAX 3.0 இன் சிறப்பியல்புகள் மற்றும் விவர வரையறைகள்

Performance — USB-IF SuperSpeed-Certified
Standardized — complies with USB 3.0 specification standards, compatible with USB 2.0
Sequential Speed — Read — up to 195MB/sec., Write — up to 160MB/sec
Shock-resistant — built with Flash components so no moving parts
Portable — Aluminum design is sleek, stylish and rugged
Silent — runs silently with no moving parts
Easy — plug & play with no driver required; utilizes USB bus power with no additional bus power required
Guaranteed — three-year warranty
Capacities — 64GB, 128GB and 256GB
Dimensions — 2.89″ x 4.67″ x 0.47″ (73.49mm x 118.60mm x 12.00mm)
Vibration Operating — 20G Peak, 10-2000Hz, (20min/Axis) x 3 Axis
Vibration Non-operating — 20G Peak, 10-2000Hz, (12 Cycle/Axis) x 3 Axis, x 20min.
Operating Shock — 1500G
Operating Temperature — 0° to 60°C / 32° to 140°F
Storage Temperature — -20° to 85°C / -4° to 185°F
Power Consumption — 4.5W

Thursday, December 23, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 23

1947: முதல் தடவையாக ட்ரான்ஸிஸ்டர் செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டது.

1948: சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தினால் யுத்தக் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 ஜப்பானியர்கள் டோக்கியோ நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972: சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

1979: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சோவியத் யூனியன் துருப்புகள் கைப்பற்றின.

1990: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 88 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.

Wednesday, December 22, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 21

1913: உலகில் முதல் தடவையாக குறுக்கெழுத்துப்போட்டி நியூயோர்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான்  -தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.ஷ

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்பலோ பயணச் சோதனைகளில் முதல் தடவையாக (அப்பலோ 8) மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் ஏவப்பட்டது.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன்; விமானம் ஸ்கொட்லாந்தின்  லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.