Saturday, December 11, 2010

விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட் இணைப்பு வேகத்தை கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம்

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு

உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட் இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்துஅதில் system.ini என்று கொடுத்து ok பொத்தானை அழுத்துவும். இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும். கோடிங் வரிகள் முடிந்ததும் நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ காப்பி செய்து கடைசி வரியில் சேர்க்கவும்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps


அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும்.
அடுத்து கணினியை Restart செய்துவிட்டு கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும்.
இப்போது இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10

 1868: உலகின் முதலாவது வீதிப் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு லண்டனில் பொருத்தப்பட்டது.

1901: முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1902: அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1906: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் நோபல் சமாதானப் பரிசை பெற்றதன் மூலம் நோபல் பரிசொன்றை பெற்ற முதல் அமெரிக்கரானார்.

1948: ஐ.நா. பொதுச்சபை சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை ஏற்றுக்கொண்டது.

1978: இஸ்ரேல் பிரதமர் மெனாச்செம் பெகின், எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது

Friday, December 10, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 9

1971: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐ.நாவில் இணைந்தது.
1973: வட அயர்லாந்து நிர்வாகத்திற்காக சபையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக பிரித்தானிய, அயர்லாந்து பிரதமர்கள் மற்றும்வட அயர்லாந்து பிரதிநிதிகள் சன்னிங்கிளேட் நகரில் வைத்து ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.

1987: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக் கெட்டிங்கிற்கும் பாகிஸ்தான் நடுவர் ஷாகூர் ராணாவுக்கும் இடையில் மைதானத்தில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றதால் டெஸ்ட் போட்டி தடைப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றின் போது நடந்த மிகப் பரபரப்பான வாக்குவாதமாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

1992:அமெரிக்கப் படையினர் சோமாலியாவில் தரையிறங்கினர்.
1993: ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் திருத்தி முடிக்கப்பட்டது.

2006 :மொஸ்கோவில் போதைப் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட தீவிபத்தினால் 45 பெண்கள் பலி.

Thursday, December 9, 2010

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய்! உறைப்பு என்றால் அப்படி உறைப்பு (பட இணைப்பு)

இங்கிலாந்தின் வடமேற்கு மாநிலமான கம்ப்ரியாவில் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளாக முழுநேர மிளகாய்ச் செய்கையாளராகப் பணியாற்றும் ஜெரால்ட் போளர் என்ற விவசாயி இந்த மிளகாய் வகையை உருவாக்கியுள்ளார்.

உலகிலேயே இதுவரை மிகவும் காரமான மிளகாய் என்ற பெயர் மெக்ஸிகோவின் ஜலபேனோ வகைக்கும், இந்தியாவின் புட்ஜொலோகியா வகைக்கும் உரியதாகவே இருந்தது. ஜெரால்ட் போளர் தனது புதிய வகை மிளகாய்க்கு நாகாவைபர் என்று பெயரிட்டுள்ளார்.

உலகில் மிகவும் காரமான மிளகாய் என்று இது கின்னஸ் புத்தகத்திலும் பதியப்படவுள்ளது. காரத்தை அல்லது உறைப்பை அளவிடுவதற்கான சர்வதேச அளவீட்டைப் பயன்படுத்தி நாகாவைபர் தான் உலகின் மிகவும் காரமான மிளகாய் என்பது வோர்விக் பல்கலைக்கழகத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

52 வயதான போளர் இப்போது சொந்தமாக மிளகாய்க் கம்பனியொன்றையும் தொடங்கியுள்ளார். இந்த மிளகாயை உண்பது மிகவும் வேதனையானது, உங்கள் நாக்கில் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்து அந்த எரிச்சல் உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கும்.

சுமார் ஒருமணி நேரத்துக்கு இது நீடிக்கும், அந்த நேரத்தில் யாருடனும் பேசவோ அல்லது வேறு எதுவுமே செய்யமுடியாது. இருந்தாலும் இது ஒரு வினோதமான அனுபவம் என்று தனது உற்பத்திபற்றி வித்தியாசமான அறிமுகத்தை போளர் வழங்கியுள்ளார்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 8

1941: ஜப்பானிய படைகள் தாய்லாந்து மீது படையெடுத்தன.
1963: பான் அமெரிக்கன் விமானமொன்று அமெரிக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 81 பேர் பலி.
1966: ஏஜீயன் கடலில் கிறீஸ் நாட்டின் கப்பலொன்று புயலில் சிக்கி மூழ்கியதால் 200 இற்கும் அதிகமானோர் பலி.
1987: அமெரிக்க ஜனாபதிபதி ரொனால்ட்  ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் அணுவாயுத குறைப்பு தொடர்பான இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991: ரஷ்யா, பெலாரஸ், பெலாவேஸா ஆகியவற்றின் ஜனாதிபதிகள் சோவியத் யூனியனை உத்தியோகபூர்வமாக கலைத்து பொதுநலவாய சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1998: அல்ஜீரியாவில் ஆயதக் குழுவொன்றினால் 81 பேர் கொல்லப்பட்டனர்.

1998: சூதாட்டமுகவர்களுடன் ஷேன் வோர்ன், மார்க் வோ ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை மூடிமறைத்தமை அம்பலமாகியது.

2009: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 127 பேர் பலி. 448 பேர் காயம்.
 

இயற்கையின் அதிசயம் - ஒரு வாழை இரண்டு பூக்கள்(பட இணைப்பு)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்தில் வாழைமரத்தில் இரண்டு பூக்களுடன் வாழைகுலை போட்டுள்ளது.

பேஸ்புக்கில் படங்களுக்கு பதிலாக கார்டூன்! மாறி வரும் மக்களின் மனநிலை

பேஸ்புக் பாவனையாளர்கள் தமது புகைப்படங்களுக்கு பதிலாக கார்டூன் கேலிச்சித்திரங்களைப் பாவிப்பது அதிகரித்து வருகின்றது.
இவ்வருட நவம்பர் மாத நடுப்பகுதி முதல் இந்தப் போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் கிரேக்கத்திலும், சைப்பிரஸிலும் உருவான இந்தப்பழக்கம் காலப்போக்கில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி மேற்படி தகவலை வெளியிட்டுள்ள இணையத்தளம் இதை சிறுவர் வன்முறைக்கு எதிரான பிரசாரமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ”உங்கள் பேஸ்புக் புகைப்படத்தை உங்களுக்குப் பிடித்த கார்டூன் புகைப்படமாக மாற்றுங்கள். 06 டிசம்பர் 2010 க்குள் இவற்றை மாற்றுமாறு உங்கள் நண்பர்களுக்கும் அழைப்புவிடுங்கள். அதன்பிறகு பேஸ்புக்கில் மனித முகங்களே இருக்கக் கூடாது. ஞாபகங்களின் ஊடுருவல் தான் அங்கு இருக்க வேண்டும்.

 இது சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான ஒரு பிரசாரமாக அமையட்டும்” என்று மேற்படி இணையத்தளம் அழைப்பு விடுத்துள்ளது.