Thursday, December 9, 2010

உலகிலேயே மிகவும் காரமான மிளகாய்! உறைப்பு என்றால் அப்படி உறைப்பு (பட இணைப்பு)

இங்கிலாந்தின் வடமேற்கு மாநிலமான கம்ப்ரியாவில் உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளாக முழுநேர மிளகாய்ச் செய்கையாளராகப் பணியாற்றும் ஜெரால்ட் போளர் என்ற விவசாயி இந்த மிளகாய் வகையை உருவாக்கியுள்ளார்.

உலகிலேயே இதுவரை மிகவும் காரமான மிளகாய் என்ற பெயர் மெக்ஸிகோவின் ஜலபேனோ வகைக்கும், இந்தியாவின் புட்ஜொலோகியா வகைக்கும் உரியதாகவே இருந்தது. ஜெரால்ட் போளர் தனது புதிய வகை மிளகாய்க்கு நாகாவைபர் என்று பெயரிட்டுள்ளார்.

உலகில் மிகவும் காரமான மிளகாய் என்று இது கின்னஸ் புத்தகத்திலும் பதியப்படவுள்ளது. காரத்தை அல்லது உறைப்பை அளவிடுவதற்கான சர்வதேச அளவீட்டைப் பயன்படுத்தி நாகாவைபர் தான் உலகின் மிகவும் காரமான மிளகாய் என்பது வோர்விக் பல்கலைக்கழகத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

52 வயதான போளர் இப்போது சொந்தமாக மிளகாய்க் கம்பனியொன்றையும் தொடங்கியுள்ளார். இந்த மிளகாயை உண்பது மிகவும் வேதனையானது, உங்கள் நாக்கில் பட்டதும் நாக்கு எரிய ஆரம்பித்து அந்த எரிச்சல் உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கும்.

சுமார் ஒருமணி நேரத்துக்கு இது நீடிக்கும், அந்த நேரத்தில் யாருடனும் பேசவோ அல்லது வேறு எதுவுமே செய்யமுடியாது. இருந்தாலும் இது ஒரு வினோதமான அனுபவம் என்று தனது உற்பத்திபற்றி வித்தியாசமான அறிமுகத்தை போளர் வழங்கியுள்ளார்.

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 8

1941: ஜப்பானிய படைகள் தாய்லாந்து மீது படையெடுத்தன.
1963: பான் அமெரிக்கன் விமானமொன்று அமெரிக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 81 பேர் பலி.
1966: ஏஜீயன் கடலில் கிறீஸ் நாட்டின் கப்பலொன்று புயலில் சிக்கி மூழ்கியதால் 200 இற்கும் அதிகமானோர் பலி.
1987: அமெரிக்க ஜனாபதிபதி ரொனால்ட்  ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் அணுவாயுத குறைப்பு தொடர்பான இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991: ரஷ்யா, பெலாரஸ், பெலாவேஸா ஆகியவற்றின் ஜனாதிபதிகள் சோவியத் யூனியனை உத்தியோகபூர்வமாக கலைத்து பொதுநலவாய சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1998: அல்ஜீரியாவில் ஆயதக் குழுவொன்றினால் 81 பேர் கொல்லப்பட்டனர்.

1998: சூதாட்டமுகவர்களுடன் ஷேன் வோர்ன், மார்க் வோ ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை மூடிமறைத்தமை அம்பலமாகியது.

2009: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 127 பேர் பலி. 448 பேர் காயம்.
 

இயற்கையின் அதிசயம் - ஒரு வாழை இரண்டு பூக்கள்(பட இணைப்பு)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு மகாவித்தியாலயத்தில் வாழைமரத்தில் இரண்டு பூக்களுடன் வாழைகுலை போட்டுள்ளது.

பேஸ்புக்கில் படங்களுக்கு பதிலாக கார்டூன்! மாறி வரும் மக்களின் மனநிலை

பேஸ்புக் பாவனையாளர்கள் தமது புகைப்படங்களுக்கு பதிலாக கார்டூன் கேலிச்சித்திரங்களைப் பாவிப்பது அதிகரித்து வருகின்றது.
இவ்வருட நவம்பர் மாத நடுப்பகுதி முதல் இந்தப் போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் கிரேக்கத்திலும், சைப்பிரஸிலும் உருவான இந்தப்பழக்கம் காலப்போக்கில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி மேற்படி தகவலை வெளியிட்டுள்ள இணையத்தளம் இதை சிறுவர் வன்முறைக்கு எதிரான பிரசாரமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ”உங்கள் பேஸ்புக் புகைப்படத்தை உங்களுக்குப் பிடித்த கார்டூன் புகைப்படமாக மாற்றுங்கள். 06 டிசம்பர் 2010 க்குள் இவற்றை மாற்றுமாறு உங்கள் நண்பர்களுக்கும் அழைப்புவிடுங்கள். அதன்பிறகு பேஸ்புக்கில் மனித முகங்களே இருக்கக் கூடாது. ஞாபகங்களின் ஊடுருவல் தான் அங்கு இருக்க வேண்டும்.

 இது சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான ஒரு பிரசாரமாக அமையட்டும்” என்று மேற்படி இணையத்தளம் அழைப்பு விடுத்துள்ளது.

Wednesday, December 8, 2010

பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.
இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.
'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள்  உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்  .
இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது.  பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

*பிறந்த திகதியும் இடமும் :-
இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

*தாயின் கன்னிப் பெயர் :-
பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

*விலாசம் :-
நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

*விடுமுறைகள் :-
உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக்  கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

*வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :-
இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :-
பேஸ்புக்கை  பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்

*ஒப்புதல்கள் :-
இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.  விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

*தொலைபேசி இலக்கம் :-
உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும்  "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

*பிள்ளைகளின் பெயர்கள் :-
இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

பேஸ்புக் தரும் புதிய குரூப் வசதி

சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து
அரட்டை அடிக்க, போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும்.

எப்படி இது ஏற்கனவே உள்ள பெரிய அளவிலான குழுக்களில் இருந்து வேறுபட்டு ள்ளது என்று இங்கு பார்க்கலாம்.

1. எப்படி தொடங்குவது?
வழக்கமான பேஸ்புக் குரூப் லிங்க், அதன் தளத்தில் இடது பிரிவில் கிடைக்கும். புதிய குரூப்ஸ் (New groups) செல்ல இங்கு லிங்க் கிடைக்காது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணையப் பக்க முகவரி at http://www.facebook.com/groups. இங்கு சென்ற வுடன், புதிய குரூப்ஸ் தொடங்க Create Group என்பதில் கிளிக் செய்திடவும்.

உங்கள் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களுக்காக எனில் அதற்கேற்றார்போல் இந்த குழுவிற்குப் பெயரிடவும். வர்த்தக நோக்கு எனில் அதனை மையப்படுத்தி பெயர் அமைக்கவும். அடுத்து பேஸ்புக் தளத்தில் பதிந்த, நீங்கள் விரும்பும் நண்பர்களின் அல்லது உறவினர்களின் பெயர்களை டைப் செய்திடவும்.

இந்த குழுவிற்கான ஐகானையும் இங்கு மாற்றலாம். தொடர்ந்து இந்த குழுவில் இடப்படும் செய்திகள், தகவல்கள் யாருக் கெல்லாம் தெரியப் படலாம் என்பது குறித்தும் இங்கு செட் செய்திடலாம். அனைத்தும் முடித்த பின்னர், Create என்பதில் கிளிக் செய்து குழு அமைத்திடும் பணியை முடிக்கலாம்.

2.குரூப் அரட்டை:
அடுத்த வசதி குழுவின் அரட்டை வசதி. இங்கு அரட்டையில் ஈடுபடும்போது, ஈடுபடும் இருவருக்கு மட்டும் அது தெரியாது. குழுவில் உள்ள அனைவரும் அரட்டையைத் தெரிந்து கொள்ளலாம். குரூப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள “Chat with Group” என்பதில் கிளிக் செய்து அரட்டையைத் தொடங்கலாம்.

3. ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளல்:
இந்த குழுவின் இன்னொரு சிறப்பு இதில் ஆவணங்களை உருவாக்குதல். இதில் உருவாக்கப்படும் ஆவணங்களை, குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தலாம். எடிட் செய்திடலாம்.

4.குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி:
குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள, இந்த குழு மட்டும் பயன்படுத்த ஒரு மின்னஞ்சல் முகவரியினை அமைக்கலாம். இதனை உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குரூப்பில் மின்னஞ்சல் செய்திகள் அனைத்தும் அனைவரும் படிக்கும்படி அமைக்கப்படும்.

5. இமெயில் அறிவிப்புகள்:
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களும் தங்களுக்கு எவை எல்லாம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதனை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளலாம்.

2012ல் என்ன நடக்கப் போகிறது?

2012ல் உலக அழிவு பற்றி எச்சரிக்கை சொல்லப்பட்டது.அதற்கு திகதியை அறிவித்து விட்டது என்னை இன்னும் யோசிக்க வைத்துள்ளது.2012, டிசம்பர் 21ம் திகதியே இந்த சம்பவம் நடைபெறவுள்ளது.


'

என்ன கொடும இது'என்று வடிவேல் பாணியில் தலையில் கை வைத்துகொண்டேன்.2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.ஆனால் சில விடயங்கள் என்னை சரியாக இருக்குமோ,என என்னை யோசிக்க வைக்கிறதே!!!!!

இதற்கு இப்போது ஏற்பட்டிருக்கும் உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.ஆசியா கண்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நாகரீகம் வளர்ந்து வரும் தற்போதைய உலகில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சு வாயுக்களால் பூமி வெப்பமயமாகி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.

ஆனால் இன்னும் இதை நம்ப முடியாமல் சில விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தவில்லை.(எத நம்ப!?)ஏற்படப்போகின்ற விளைவால் 30 சதவீதமான உயிரினங்கள் அழிவடையலாம் என எதிர்வு கூறப்ப்பட்டுள்ளது.(குழப்ப்புறாங்க ஐயா!)


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஞ்ஞானி உண்டு என அனைவரும் மறந்து போயிருப்பது புரிகிறது.உலகம் என்றாவது அழியத்தானே போகிறது.இது என்னை பொறுத்து எல்லா மதத்திலும் கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இதை வைத்துக் கொண்டு சூது விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.வாஸ்த்து சாஸ்த்திரங்களை வைத்தும் விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.

என்ன நடந்ததோ அது நன்றகவே நடந்நது....
எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாக்வே நடக்கும்.....